ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நல்லாசியுடன் என்டர்டெயின்மென்ட் பிரதர்ஸ் வெளியிடும் படம் ‘சவாரி’.
குகன் சென்னியப்பன் இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைப்பில் கார்த்திக் யோகி, பெனிட்டோ பிரான்க்ளின், மதிவாணன் ராஜேந்திரன், சனம் ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தைப் பத்தி முதல்ல நிறைய பேர் கிட்ட சொல்லும் போது அவங்க த்ரில்லரை மட்டும்தான் பார்த்தாங்க. ஆனால், படத்துல காமெடியும் கூடவே வரும். அது மட்டுமில்லாம நிறைய விஷயங்களும் இருக்கு.
இந்தப் படத்தை முதல்ல டேக் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்கள் கிட்ட சொல்லும் போது அவங்க ஒளிப்பதிவாளர் செழியன் சாருக்கு கதை பிடிச்சால் படம் பண்ணலாம்னு சொன்னாங்க.
அவர் கிட்ட சொன்னதும், ஒரு வாரம் படிக்க டைம் கேட்டாரு. படிச்சிட்டு வந்து இந்தப் படம் நான் கண்டிப்பா பண்றன்னு சொன்னாரு. இது வித்தியாசமான படமா வரும்னு நம்பிக்கை தந்தாரு. அப்புறம்தான் படப்பிடிப்பே ஆரம்பமாச்சி.
இந்தப் படத்துக்கு எடிட்டிரா இருந்தவரு மறைந்த எடிட்டர் கிஷோர் சார். அவர் எடிட் பண்ண கடைசி படம் இது. என்ன சம்பளம் வேணா கொடுங்க, ‘ஈரம்’ படத்துக்கப்புறம் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ண படம் இதுன்னு சொன்னாரு, அவரை ரொம்பவே மிஸ் பண்றேன்.
விஷால் சந்திரசேகர் இசையில அதுவும் பின்னணி இசையில படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்காரு.
இந்தப் படம் ஒரு சைக்கோ த்ரில்லர் படம்னு சொல்லலாம். ஒரு வின்டேஜ் காரை மையமா வச்சி காட்டுக்குள்ள நகர்ற ஒரு பரபரப்பான சுவாரசியமான படமா இந்தப் படம் இருக்கும். இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவுல வந்ததில்லன்னு தாராளமாக சொல்லாம்,” என்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன்.
மார்ச் 18ம் தேதி ‘சவாரி’ படம் வெளிவருகிறது.