மீண்டும் வெற்றிப் பாதையில் விஜய் சேதுபதி

‘பீட்சா’ படத்தில் ஆரம்பமான விஜய் சேதுபதியின் வெற்றி அடுத்த சில படங்களில் சீரான வேகத்தில் உயர்ந்தது.

ஆனால், ‘ரம்மி’ படத்தின் தோல்வி அவரை ஏற்றிய வேகத்திலேயே கீழிறக்கியது. அது ‘ஆரஞ்சு மிட்டாய்’ படம் வரை தொடர்ந்தது.

‘நானும் ரௌடிதான்’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பினார் விஜய் சேதுபதி. அப்படத்தின் வெற்றிக்கு நயன்தாராவும் மிகவும் முக்கியமான காரணமாக இருந்தார்.

இருந்தாலும் மீண்டும் விஜய் சேதுபதி வெற்றிப் பாதையில் திரும்பியது அவரை வைத்து அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வந்தவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

கடந்த மாதம் வந்த ‘சேதுபதி’ படமும் வெற்றி பெற்றது. இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்த ‘காதலும் கடந்து போகும்’ படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக தமிழ்நாடு முழுவதும் இருந்தும் தகவல்கள் வருகின்றன.

அடுத்து விஜய் சேதுபதி நடித்துள்ள ‘இறைவி’ படம் வெளிவருவதற்குள் நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருக்கும் ‘இடம் பொருள் ஏவல், மெல்லிசை’ படங்கள் வெளிந்தால் அந்தப் படங்களின் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நிம்மதி அடைவார்கள் ?.

முடிவு யார் கையில் இருக்கிறதோ ?….

Read Previous

6 நிமிடப் படம் யு டியூபில் வெளியீடு…இதுதான் வித்தியாசமா ?

Read Next

அம்மா கணக்கு – அம்மா வேடத்தில் அமலா பால்