அம்மா கணக்கு – அம்மா வேடத்தில் அமலா பால்

தனுஷ் தயாரிப்பில் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அம்மா கணக்கு’.

ஹிந்தியில் ‘நில் பட்டே சன்னாட்டா’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த்ததும் தமிழில் எடுக்க முடிவு செய்த தனுஷ் உடனே படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். குறுகிய காலத்தில் படத்தையும் தயாரித்து முடித்து விட்டார்கள்.

நேற்று இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. படத்தில் 13 வயது பெண்ணுக்கு அம்மாவாக அமலா பால் நடித்துள்ளார். அமலாவின் தோழியாக நடிகை ரேவதியும், முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடித்துள்ளார்கள்.

இளையராஜாவின் இசையில் இந்தப் படத்திற்கான பின்னணி இசை வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்களாம்.

Read Previous

மீண்டும் வெற்றிப் பாதையில் விஜய் சேதுபதி

Read Next

விக்ரம், காஜல் அகர்வால் நடிக்கும் ‘கருடா’