தெலுங்கில் இன்றைய இளம் நடிகர்களில் முன்னணியில் இருக்கும் அல்லு அர்ஜுன் விரைவில் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்க உள்ள புதிய படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கப் போகிறார்.
இப்படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து முடிந்துள்ளன. அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
அல்லு அர்ஜுன் சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவர். 2003ல் வெளிவந்த ‘கங்கோத்ரி’ என்ற படம் மூலம் தெலுங்குத் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார்.
இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘சர்ரைனோடு’ படம் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
‘கௌரவம்’ படத்தில் நாயகனாக நடித்த அல்லு சிரிஷ், அல்லு அர்ஜுனின் தம்பி ஆவார்.
அல்லு அர்ஜுனைத் தொடர்ந்து மகேஷ் பாபுவும் நேரடித் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.