எதை செய்தாலும், அதை வித்தியாசமாகச் செய்து ஆச்சரியப்பட வைப்பார் இயக்குனர், நடிகர் பார்த்திபன்.
மே 16ம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அவருடைய பாணியில் ஒரு பத்திரிகைச் செய்தியை வெளியிட்டிருக்கிறார். அது இதோ….
O2 = oxygen
ஓட்டு=பிராணவாயு▶️ஆரோக்கிய மக்களாட்சிக்கு!
உயிருக்கு சுவாசம் போல்…
ஆழ்ந்து (யோசித்து)உள்வாங்கி
(கவனமாய்) நிதானித்து வெளியிடும்
(வாக்குரிமை) நம் இருப்பை
உறுதி செய்யும்!
⬇️ஓ(ட்)டு போட்ட வீடு ஒழுகாது.
நழுவாது ஓட்டுப் போடுவோம் !
⬆️[ஓட்டுப்◀️போட்ட வீடு என்றிருக்க வேண்டும்.
‘ ப் ‘ போடாமல் விடுவது சந்திப் பிழை மட்டுமே
ஓட்டே போடாமல் விடுவது சந்ததிப் பிழையாகிவிடும்]
Getting note&
Putting vote is
nothing but a
Cheapest form of
PROSTITUTION
Selling yourselves
Selling your souls
—————–
இப்படிக்கு,
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
(திரைக்கலைஞனை மீறி
விலை போகாத
இந்தியக் குடிமகன் !)