25வது ஆண்டில் ‘அண்ணாமலை’ – குஷ்பு நெகிழ்ச்சி

ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு மற்றும் பலர் நடித்த ‘அண்ணாமலை’ படம் வெளிவந்து இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகின்றன. ‘பாட்ஷா’ படம் வரும் வரை ‘அண்ணாமலை’ படமே ரஜினிகாந்தின் சூப்பர் படமாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றிருந்தது.

25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தப் படம் பற்றி குஷ்பு தன்னுடைய மலரும் நினைவுகளை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

“நன்றி, கவிதாலயா, சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய மிகச் சிறந்த நடிப்பு, நானும் என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தேன்.

அண்ணாமலை பற்றி சிறந்த நினைவுகள். முதலில் சூப்பர் ஸ்டாருடன் நான் தனி ஹீரோயினா என்பதை நம்ப மறுத்தேன். சூப்பர்ஸ்டாருடன் சிறந்த நினைவுகளைப் பகிர்ந்தேன்.

வேறு எந்த ஒரு நடிகரும், அவர்களுடைய அந்தஸ்திற்கு என் பெயரில் வரும் பாடலைப் பாடிய சம்மதித்து இருக்க மாட்டார்கள். இன்னமும் நான் எங்கெல்லாம் போகிறேனோ, அங்கு அந்தப் பாடல் என்னைத் தொடர்கிறது.

நன்றி, சூப்பர் ஸ்டார் ரஜினி சார்,” என ‘அண்ணாமலை’ பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

Read Previous

சபாஷ் நாயுடு – முதல் கட்ட அமெரிக்க படப்பிடிப்பு நிறைவு

Read Next

ரெமோ – சிங்கப்பூரில் ‘செஞ்சிட்டாளே…’ சிங்கிள் ரிலீஸ்