ஜுலை மாதம் 1ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று 5 தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளன.
‘கபாலி’ படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதால் படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் சில படங்களை அதற்கு முன்னதாகவே வெளியிட முடிவு செய்ததால் அன்றைய தினம் இத்தனைப் படங்கள் வெளியாகின்றன.
“அப்பா, ஒன்பதிலிருந்து பத்து வரை, ஜாக்சன் துரை, ஒரு மெல்லிய கோடு, பைசா” ஆகிய 5 நேரடித் தமிழ்ப் படங்களுடன் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ டப்பிங் படமும் வெளியாகிறது.
அப்பா
தயாரிப்பு – நாடோடிகள், எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – சமுத்திரக்கனி
இசை – இளையராஜா
நடிப்பு – சமுத்திரக்கனி, தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி மற்றும் பலர்.
ஒன்பதிலிருந்து பத்து வரை
தயாரிப்பு – ஹீரோ சினிமாஸ்
இயக்கம் – விஜய் சண்முகவேல் அய்யனார்
இசை – கார்த்திக்
நடிப்பு – கதிர், ஸ்வப்னா மேனன் மற்றும் பலர்
ஜாக்சன் துரை
தயாரிப்பு – ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்
இயக்கம் – தரணிதரன்
இசை – சித்தார்த் விபின்
நடிப்பு – சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி மற்றும் பலர்
ஒரு மெல்லிய கோடு
தயாரிப்பு – அக்ஷயா கிரியேஷன்ஸ்
இயக்கம் – ஏஎம்ஆர். ரமேஷ்
இசை – இளையராஜா
நடிப்பு – அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா மற்றும் பலர்
பைசா
தயாரிப்பு – கான்பிடன்ட் பிலிம் கேர், ஆர்கே டிரீம் வேர்ல்டு, ஒயிட் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – அப்துல் மஜீத்
இசை – ஜேவி
நடிப்பு – ‘பசங்க’ ஸ்ரீராம், புதுமுகம் ஆரா மற்றும் பலர்