மஞ்சிமா மோகன், அடுத்த கீர்த்தி சுரேஷ் ?

தமிழ்த் திரையுலகத்தில் நடித்த ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே நான்கைந்து படங்கள் ஒப்பந்தம் ஆன நடிகைகளின் வரிசையில் மஞ்சிமா மோகன் இடம் பிடித்துள்ளார்.

‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், அந்தப் படம் வெளிவருதவற்கு முன்பே நான்கைந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

அவரது வரிசையில் தற்போது அவருடைய நெருங்கிய தோழியான மஞ்சிமா மோகனும் இடம் பிடித்துள்ளார்.

மஞ்சிமா மோகன் கடந்த ஆண்டுதான் மலையாளத்தில் ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்து வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே தற்போது மேலும் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விக்ரம் பிரபு ஜோடியாக ஒரு படம், விஷ்ணு விஷால் ஜோடியாக ஒரு படம், விஷால் ஜோடியாக ‘சண்டக்கோழி 2’  படம் என மூன்று படங்களில் நடிக்க உள்ளார்.

‘அச்சம் என்பது மடமையடா’ படப்பிடிப்பு முடிந்து வருவதற்குள் மஞ்சிமா மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனாலும் ஆச்சரியமில்லை.

Read Previous

சிம்புவுக்கு சம்பள பாக்கி வைத்த கௌதம் மேனன் ?

Read Next

அஜித் புதிய படம், 7ம் தேதி பூஜை