சிம்புவுக்கு சம்பள பாக்கி வைத்த கௌதம் மேனன் ?

இயக்தகுனர் கௌதம் மேனன், சிம்பு இடையிலான சர்ச்சைதான் தமிழ்த் திரையுலகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம் பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடலான ‘தள்ளிப் போகாதே…’ பாடலைப் படமாக்க சிம்பு வரவில்லை என சில நாட்களுக்கு முன்பு வெளிப்படையான பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார் இயக்குனர் கௌதம் மேனன்.

ஆனால், அதற்கு முன்பாகவே சிம்புவின் அப்பா டி.ஆர், கௌதம் மேனன் தரப்பிலிருந்து செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகையை இன்னும் செலுத்தாமல் உள்ளார்கள் என குற்றம் சாட்டியிருந்தார்.

இருந்தாலும் தற்போது சிம்பு தரப்பிலிருந்து வேறு ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதாவது, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக சிம்புவுக்குத் தரவேண்டிய சம்பளத் தொகையில் கௌதம் மேனன் இதுவரை 40 சதவீதம் மட்டுமே கொடுத்துள்ளாராம். இன்னும் 60 சதவீத சம்பளத் தொகையை அவர் பாக்கியாக வைத்துள்ளாராம். அதனால்தான், சிம்பு படப்பிடிப்புக்குப் போகவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு கௌதம் மேனன்தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

Noted editor to produce Emoji

Read Next

மஞ்சிமா மோகன், அடுத்த கீர்த்தி சுரேஷ் ?