அஜித் புதிய படம், 7ம் தேதி பூஜை

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித் நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை ஜுலை 7ம் தேதியன்று நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து விசாரித்த போது, ஜுலை இரண்டாவது வாரத்தில் ஆடி மாதம் பிறக்கப் போவதால், அதற்கு முன்னதாகவே அலுவலகத்தில் எளிமையாக படத்தின் பூஜையை நடத்த முடிவு செய்துள்ளதாகச் சொன்னார்கள்.

அதன் பின் ஜுலை மாதக் கடைசியில் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்களாம். இப்படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க உள்ள நாயகி தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

‘வீரம், வேதாளம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜித், இயக்குனர் சிவா மூன்றாவது முறையாக கூட்டணி சேர உள்ள படம் இது.

Read Previous

மஞ்சிமா மோகன், அடுத்த கீர்த்தி சுரேஷ் ?

Read Next

A special tribute to Kalabhavan Mani