‘கபாலி’ படம் எப்போது வெளியாகும் என்று திரைப்பட ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
படத்தின் சென்சார் முடிந்ததும் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருந்தது.
கடந்த இரண்டு நாட்களாகவே படத்தின் சென்சார் நடைபெறுகிறது என்ற செய்திகளும் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் சற்று முன்னர், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு அறிவித்தார்.
அதன்படி ஜுலை 22ம் தேதி ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.