‘எஸ் 3’ – வெளியீட்டுக்கு முன்பே ’62’ கோடி வியாபாரம்

சூர்யா என்றதுமே இரண்டு படங்கள் ரசிகர்களுக்கு அதிகம் ஞாபகத்திற்கு வரும், ஒன்று ‘காக்க காக்க’, மற்றொன்று ‘சிங்கம்’.

‘சிங்கம், சிங்கம் 2’ என இரண்டு பாகங்களிலும் ‘ஹிட்’ அடித்த பிறகு மூன்றாவது பாகமாக ‘எஸ் 3’ படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது.

வெளியீட்டிற்கு முன்பே இப்படத்தின் வியாபாரம் தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் முடிவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உதயம் என்டர்டெயின்மென்ட் என்ற புதிய நிறுவனம் தமிழ்நாட்டு உரிமையை 40 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாம்.

தெலுங்கு உரிமை 18 கோடி ரூபாய்க்கும் மலையாள உரிமை 4 கோடி ரூபாய்க்கும் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டதாம்.

தீபாவளிக்கு வருவதாகச் சொல்லப்படும் ‘எஸ் 3’ படப்பிடிப்பில் இருக்கும் போதே 62 கோடி ரூபாயை வருவாயாகப் பார்த்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Read Previous

செல்வராகவன், சந்தானம் கூட்டணி – ஆச்சரியக் கேள்விகள்

Read Next

மூன்று மொழிகளில் வெளியாகும் மோகன்லால் படம்