மூன்று மொழிகளில் வெளியாகும் மோகன்லால் படம்

மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ படத்தில் ஜோடி சேர்ந்த மோகன்லால் – கவுதமி ராசியான ஜோடி என்று கேரளாவில் பாராட்டப்பட்டவர்கள். அந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது.

தமிழில் ‘நமது’ என்ற பெயரில் இப்படம் வெளியாக உள்ளது. தெலுங்கில் ‘மனமன்தா’ என்ற பெயரிலும், மலையாளத்தில் ‘விஸ்மயம்’ என்ற பெயரிலும் தயாராகியுள்ளது.

தெலுங்கில் கோபிசந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கிய சந்திரசேகல் எலட்டி இந்தப் படத்தை இயக்குகிறார்.

விஸ்வநாத் – ஹனிஷா ஆம்ரோஷ் இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள். மற்றும் நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடி மாருதிராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

வசனம் மற்றும் பாடல்களை மதன்கார்க்கி எழுதுகிறார்.

சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 5ம் தேதி மூன்று மொழிகளில் வெளியாகிறது.

Read Previous

‘எஸ் 3’ – வெளியீட்டுக்கு முன்பே ’62’ கோடி வியாபாரம்

Read Next

Rajinikanth is fine, visits a temple