‘ரெமோ’ – வெளிநாடு வெளியீட்டில் புதிய முறை

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள ‘ரெமோ’ படம் அக்டோபர் 7ம் தேதியன்று வெளியாகிறது.

இந்தப் படத்தின் வெளிநாடு வெளியீட்டை புதிய முறையில் வெளியிட உள்ளார்கள். அதன்படி படம் அக்டோபர் 7ம் தேதி தமிழ்நாட்டில் வெளியான பிறகே வெளிநாடுகளில் வெளியாகும். அதுவும் முதல் காட்சி முடிந்த பிறகுதான் வெளியிடப் போகிறார்கள்.

தமிழ்நாட்டில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகத்தான் தமிழ்ப் படங்கள் வெளிநாடுகளில் வெளியாகும். வெளிநாடுகளில் படம் பார்க்கும் சிலர் ஆர்வக் கோளாறால் படத்தைப் பற்றி பல்வேறு விதமான நெகட்டிவ் விமர்சனங்களை வேண்டுமென்றே பரப்புவது வழக்கம். இனி, அப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவும் நடக்காது.

அதோடு, பைரசி இணையதளங்கள் மூலமும், திருட்டு விசிடி மூலமும் தமிழ்நாட்டில் படம் வெளியாகும் போதே அவை வெளியாவதும் தடுக்கப்பட்டுவிடும்.

படத்தை திருட்டுத் தனமாக இணையதளங்களில் வெளியாகாமல் தடுப்பதற்கும் ‘ரெமோ’ குழுவினர் கடுமையான நடவடிக்கைகளை இப்போதே செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார்களாம்.

‘ரெமோ’ படத்தின் வெளியீடு பல புதிய விஷயங்களுக்கு ஆரம்பமாக இருக்கம் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

Read Previous

நா.முத்துக்குமாரை நினைவு கூர்ந்த ‘மேல்நாட்டு மருமகன்’

Read Next

Vikram conducted himself well in US