சுராஜ் இயக்கத்தில் ஹிப்-ஹாப் தமிழா இசையமைப்பில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கத்திச் சண்டை’.
இப்படத்தின் பாடல் காட்சி ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் சுராஜ் கூறியதாவது,
“இந்த படத்திற்காக விஷால் – தமன்னா இருவரும் பங்குபெற்ற “குட்டி குட்டி நெஞ்சிலே காதல் வந்ததும் நெஞ்சில் லட்சம் பூக்கள் பூக்குதே…“ என்ற பாடல் காட்சி நடன இயக்குனர் ராதிகா நடன அமைப்பில் ஜார்ஜியாவில் படமாக்கப் பட்டது.
அத்துடன் விஷால் மட்டும் பங்குபெற்ற “எவன் நெனச்சாலும் என்ன புடிக்க முடியாது” என்ற பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது.
இந்தப் பாடல்கள் அனைத்தும் நிச்சயமாக ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
காமெடிக்கும், அதிரடி ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் ‘கத்திச் சண்டை’ வருகிற தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது,” என்றார் இயக்குனர் சுராஜ்.