90களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் நக்மா. சூர்யாவின் மனைவி ஜோதிகாவின் அக்கா.
ஹிந்தி, தெலுங்குப் படங்களில் நாயகியாக பல படங்களில் நடித்த பின் ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நாயகியாக நடித்தார்.
ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான ‘பாட்ஷா’ படத்தின் நாயகியும் நக்மாதான். வளர்ந்த வேகத்திலேயே திடீரென திரையுலகத்தில் காணாமலும் போனார்.
கடைசியாக அஜித் நடித்த ‘சிட்டிசன்’ படத்தில் நடித்தார். அந்தப் படம் வெளிவந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் போஜ்புரி, ஹிந்தி ஆகிய மொழிகளில் நக்மா நடித்து வந்தார்.
தற்போது மீண்டும் தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். தெலுங்கில் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியே தமிழ்ப் படங்களிலும் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் நக்மா.