கீதா ஆர்ட்ஸ், மற்றும் ஸ்வப்னா சினிமா வழங்க லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் தயாரிக்க, பவன் சடினேனி இயக்கத்தில், துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஏஒடி’.
சாத்விகா வீரவல்லிக்கு இது ஒரு கனவு போன்ற அறிமுக வாய்ப்பாக அமைந்துள்ளது. கிடைத்துள்ள இந்தப் பொன்னான வாய்ப்பை அவர் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். எளிமையான, நம் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற தோற்றத்துடன், பெரிய கனவுகளையும் லட்சியங்களையும் கொண்ட கதாபாத்திரத்திற்கு அவர் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.
ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் வழங்கும் இப்படம், ‘மகாநதி’, ‘சீதா ராமம்’, ‘கல்கி 2898 AD’ ஆகிய படங்களின் மூலம் உருவான மறக்க முடியாத கூட்டணிக்குப் பிறகு, துல்கர் சல்மானை ஸ்வப்னா சினிமாவுடன் மீண்டும் இணைக்கிறது.
வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ ஏ ஒ டி ‘ திரைப்படம், இந்த நிறுவனங்களின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர்கள்: துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
இயக்குநர்: பவன் சடினேனி
எழுத்தாளர்: கங்கராஜு குன்னம்
தயாரிப்பாளர்கள்: சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்
வழங்குபவர்கள்: கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சுஜித் சாரங்
தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்