கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

நடிகர் கார்த்தி அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய H. வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக உருவாகி வரும் தமிழ், தெலுங்கு இரு மொழிப் படத்திற்குப் பிறகு ரகுல் நடிக்கும் தமிழ்ப் படம் இது.

‘சிறுத்தை’ படத்திற்குப் பிறகு கார்த்தி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் இது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R. பிரகாஷ்பாபு , S.R. பிரபு தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜனவரி முதல் வாரம் முதல் ஆரம்பமாகிறது.

Read Previous

Anirudh does it for Thaman

Read Next

Mo Trailer