மீண்டும் விமர்சனத்தில் சிக்கிய ஸ்ருதிஹாசன்

மலையாளத்தில் வரலாற்று சாதனை படைத்த ‘பிரேமம்’ படம் அதே பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆனது.

மலையாள மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தெலுங்கில் ஸ்ருதிஹாசன் ஏற்று நடித்தார். அப்படத்தின் புகைப்படங்கள் வெளியான போதே ஸ்ருதிஹாசன் மிகவும் கிண்டலடிக்கப்பட்டார்.

டீசர் வெளிவந்ததும் அந்த கிண்டலும், கேலியும் இன்னும் அதிகமானது. இப்போது மீண்டும் அப்படி ஒரு கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த ‘கட்டமராயுடு’ படம் கடந்த வாரம் வெளிவந்தது.

படத்தின் வசூல் 50 கோடியைத் தாண்டினாலும் பவன் கல்யாண் ரசிகர்களும், விமர்சகர்களும் ஸ்ருதிஹாசனின் தோற்றத்தை படத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

படத்தில் அவர் தேர்ந்தெடுக்க ஆடைகளையும், அவர் போட்ட மேக்கப்பும் விமர்சனத்தில் சிக்கியுள்ளன. படத்தின் இயக்குனர் கூட இது குறித்து விமர்சித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

30 வயதைக் கடந்துவிட்ட ஸ்ருதிஹாசன் இனி மேலாவது தனது தோற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தெலுங்குத் திரையுலகில் குரல்கள் எழுந்துள்ளனவாம்.

Read Previous

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘நாகேஷ் திரையரங்கம்’ டீசர்

Read Next

Dora – Review & Rating