300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘காற்று வெளியிடை’ ரிலீஸ்

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி, ஆர்.ஜே. பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ படம் இன்று தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் 25வது வருடத்தில் இப்படம் வெளியாவது சிறப்பு.

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றிய கார்த்தி அவரது இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கும் படம் இது.

இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டாகி படத்திற்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்துள்ளது. இந்த வாரத்திற்கான முன்பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தெலுங்கில் ‘செலியா’ என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது. கர்நாடகா, கேரளா, வட இந்தியாவின் பல பகுதிகளில் இப்படம் ஆங்கில சப்-டைட்டிலுடன் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

Read Previous

திரையுலகினரின் பாராட்டில் ‘8 தோட்டாக்கள்’

Read Next

‘ப. பாண்டி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்