30 வயது நடிகையை திடீர் திருமணம் செய்த 60 வயது இயக்குனர்

“நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன்” உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ திரைப்படம் நேற்று வெளியானது.

அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷெர்லி தாஸ்.

இன்று காலை படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பு திடீரென இயக்குனர் வேலு பிரபாகரனும், ஷெர்லி தாஸும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள்.

‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ படத்தைப் பார்க்க வந்த பத்திரிகையாளர்கள் ‘ஒரு இயக்குனரின் காதல் திருமணத்தைப்’ பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள்.

இதுவரை எவ்வளவோ பத்திரிகையாளர்கள் காட்சி நடைபெற்றிருக்கிறது. ஆனால், அதில் இப்படி ஒரு திருமணம் இதுவரை நடைபெற்றதே இல்லை.

நாட்டில் எவ்வளவோ திடீர் திடீரென நடக்கிறது, அதில் இதுவும் ஒன்று.

Read Previous

‘ஸ்பைடர்’ டீசர் புதிய சாதனை

Read Next

ரஜினி, விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளிய மகேஷ் பாபு