யு டியூப் என்றாலே ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் நடித்து வெளிவந்த படங்களின் டீசர், டிரைலர் ஆகியவைதான் முன்னணியில் இருக்கும்.
அவர்களது படங்கள்தான் பல சாதனைகளைப் புரியும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை அவர்கள் படங்களுக்குள்தான் போட்டியும் இருக்கும்.
ஆனால், அதை நேற்று வெளியான ‘ஸ்பைடர்’ டீசர் முறியடித்துவிட்டது.
24 மணி நேரத்தில் 63 லட்சம் பார்வைகளைக் கடந்தும், 2 லட்சத்தை நெருங்கிய லைக்குகளும் பெற்று சாதனை புரிந்தது.
யு டியூப், ஃபேஸ்புக் இரண்டையும் சேர்த்து 1 கோடி பார்வைகளை இந்த டீசர் தற்போது கடந்துள்ளது.
தென்னிந்திய அளவில் மிக விரைவாக 1 கோடி பார்வையைப் பெற்ற டீசர் என்ற பெருமை ‘ஸ்பைடர்’ படத்திற்குக் கிடைத்துள்ளது.
மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.