போங்கு விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஒரு பாணியிலான கதையும், கதாபாத்திரமும் ஒருவருக்கு ‘செட்’ ஆகிவிட்டால், அதே விதத்தில் அவரைத் தேடி பல கதைகள் போகும்.

அப்படி ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜுக்குப் போன கதைதான் ‘போங்கு’ போலிருக்கிறது.

படித்து முடித்துவிட்டு ஒரு கார் ஷோரூமில் நல்ல வேலையில் இருக்கும் நட்ராஜ், ருஹி சிங், அர்ஜுனன் ஆகியோர் ஒரு காரை டெலிவரி கொடுக்கும் சமயத்தில் அந்தக் காரை யாரோ திருடிவிடுகிறார்கள். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் நட்ராஜ், அர்ஜுன் ஆகியோரைக் குற்றவாளிகளாக்கி சிறையில் தள்ளி விடுகிறது.

சிறையிலிருந்து வெளிவரும் நட்ராஜ், அர்ஜுனன் இருவருக்கும் சிறையில்  ராஜன் அறிமுகமாகிறார். சிறையை விட்டு வெளியில் வந்ததும் ராஜன் மூலம் கார் கடத்தும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

மதுரையில் உள்ள பிரபல தாதாவான சரத் லோகித்சவாவிடம் இருந்து விலை உயர்ந்த 10 கார்களைத் திருடும் வேலையில் நட்ராஜ், அர்ஜுனன், ராஜன், ருஹி சிங் இறங்குகிறார்கள். அங்கு அவர்கள் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் நடக்கிறது. அது என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

‘சதுரங்க வேட்டை’ பாணியிலான கதாபாத்திரத்தில் மீண்டும் நட்ராஜ். வழக்கம் போல யதார்த்தமாக நடித்திருக்கிறார். அர்ஜுனனுக்கு காமெடி கதாபாத்திரம் இல்லை. இருந்தாலும் படம் முழுவதும் வருகிறார்.

ருஹி சிங் படத்தின் கதாநாயகி. நடிப்பதற்கு அப்படியொன்றும் பெரிய வாய்பில்லை. இருந்தாலும் தன்னுடைய கிளாமர் மூலம் கவனிக்க வைக்கிறார்.

சரத் லோகித்சவா படத்தின் வில்லன். இன்னும் எத்தனை முறை இப்படி மதுரை தாதாவை தமிழ்ப் படங்களில் வில்லனாகப் பார்ப்பது என்று தெரியவில்லை. அதுல் குல்கர்னியை வேஸ்ட் செய்திருக்கிறார்கள்.

பெரிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதை. சீரியசான கார் கடத்தல் கதையாக மட்டுமே நகர்த்தியிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையையும் சேர்த்து வைத்திருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும்.

Read Previous

ரஜினி, விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளிய மகேஷ் பாபு

Read Next

விளையாட்டு ஆரம்பம் விமர்சனம்

Most Popular