ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஸ்பைடர்’.
இப்படத்தின் டீசர் நேற்று காலை 10.30 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பேர் பார்வையிட ஆரம்பித்தார்கள்.
இன்று காலை 10.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ‘ஸ்பைடர்’ டீசரை சுமார் 63 லட்சம் பேர் பார்த்தனர்.
இதன் மூலம் தென்னிந்திய அளவில் ‘ஸ்பைடர்’ டீசர் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
அது மட்டுமல்ல இதற்கு முன் விஜய், அஜித், ரஜினி படங்கள் புரிந்த சாதனையையும் முறியடித்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் அவர்கள் மூவர் நடித்த படங்களின் டீசர்தான் இதுவரை பல சாதனைகளை மாறி மாறி புரிந்து கொண்டிருந்தது. இப்போது தெலுங்கிலிருந்து வந்துள்ள மகேஷ் பாபு அந்த சாதனையைப் புரிந்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்.
மற்ற படங்கள் 24 மணி நேரத்தில் புரிந்த சாதனை…
1. ஸ்பைடர் – 63 லட்சம்
2. விவேகம் – 60 லட்சம்
3. கபாலி – 51 லட்சம்
4. பைரவா – 28 லட்சம்
5. சி 3 – 27 லட்சம்
6. தெறி – 23 லட்சம்