நான் மட்டுமே கதை கேட்கிறேன் – கௌதம் கார்த்திக்

‘ரங்கூன்’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அப்படத்தின் நாயகன் கௌதம் கார்த்திக் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“மணிரத்னம் இயக்கத்தில் நான் நாயகனாக அறிமுகமான ‘கடல்’ படம் எனக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. எனக்கு சினிமாவில் வழி நடத்த யாரும் இல்லாததால் அதன் பின் என்னுடைய தேர்வுகள் சரியாக இல்லாமல் போனது.

எனக்காக என் அப்பா கதையெல்லாம் கேட்பதில்லை. சிறுவயதிலிருந்தே நானாகவே முடிவெடுத்து வளர வேண்டும் என்றுதான் கூறுவார். இப்போதுதான் சினிமாவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரிந்தது.

‘ரங்கூன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர்கள் என்னைத் தேடி வருவார்கள் என்று நம்புகிறேன்.

என் அப்பா படங்களை ரீமேக் செய்தெல்லாம் நடிக்க மாட்டேன். இப்போதுதான் வெற்றியை ருசிக்கிறேன். அப்பாவுடன் சேர்ந்து நடிப்பதெல்லாம் இப்போதைக்கு இருக்காது, பின்னர் நடக்கலாம்.

என்னுடைய அப்பா அவருக்கென தனி பாணியை உருவாக்கி வைத்து அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகராக இருந்தார். நானும் அனைவரும் விரும்பும் ஒரு நடிகனாக வேண்டும் என நினைக்கிறேன்.

என்னைப் பற்றியும்  நடிகை பிரியா ஆனந்த் பற்றியும் காதல் கிசுகிசு வருகிறது. அவர் என்னுடைய நெருங்கிய தோழி, குடும்பத்துக்கு நெருக்கமானவர். நான் காதலித்துத்தான் திருமணம் செய்து கொள்வேன்.

‘ரங்கூன்’ படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி,” என கௌதம் கார்த்திப் பேசினார்.

தனது படங்களுக்கான கதையை நான் மட்டுமே கேட்கிறேன். புதிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க எந்தத் தயக்கமும் இல்லை என்றும் கௌதம் கார்த்திக் தெரிவித்தார்.

அதனால், நல்ல கதை வைத்துள்ள புதிய இயக்குனர்கள் கௌதம் கார்த்திக்கைத் தாராளமாக அணுகலாம்.

Read Previous

300 தியேட்டர்களில் வெளியாகும் ‘மரகத நாணயம்’

Read Next

ஷிவானி ராஜசேகர், அடுத்த வாரிசு நடிகை