டீ டைம் டாக்கீஸ் தயாரித்து ஆரா சினிமாஸ் வெளியிட உள்ள ‘பண்டிகை’ படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார்
இளைஞர்கள் இடையே பொழுது போக்காகத் துவங்கி , பந்தயப் போட்டியாகத் தொடரும் சண்டை, போட்டிகள் பற்றிய வித்யாசமான திரில்லர் மற்றும் காதல் கலந்த படம் தான் ‘பண்டிகை’.
சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் சண்டை, போட்டிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கிருஷ்ணா, ஆனந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
”சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சட்ட விரோத சண்டை, போட்டிக்குத் தள்ளப்பட்ட ஓர் கோபக்கார இளைஞனின் காதல் தான் பண்டிகை. காதலிலும் ஆக்ஷனிலும் சரியான அளவில் பயணிக்கும் படம் இது.
படத்தைப் பார்த்து எங்கள் குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்பட்டது. நல்ல படங்களை வெளியிட்டு வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கும் ஆரா சினிமாஸ் எங்கள் படத்தை வெளியிட முன் வந்ததினால் எங்களது உழைப்பும் படத்தின் தரமும் ஊர்ஜிதமானது.
சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் ‘பண்டிகை’ மக்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாட்டத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர் பெரோஸ் .