‘விவேகம் ‘ படத்தின் ‘சர்வைவவா’ பாடல் மட்டும் நேற்று யு டியூப் இணையதளத்தில் ‘லிரிக் வீடியோ’வாக வெளியிடப்பட்டது.
புகழ் பெற்ற தமிழ் ராப் பாடகர் யோகி பி மற்றும் அனிருத் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்தப் பாடல் இளம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது யோகி B தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
‘சர்வைவா ‘ எனக்குக் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. அஜித் அவர்களின் நடிப்புக்கும், அனிருத்தின் இசைக்கும் ரசிகனான எனக்கு இப்பாடலின் மூலம் இருவருடனும் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம்.
எனது இசை வாழ்க்கையில் ‘சர்வைவ’ ஒரு மைல் கல்லாகும் . இப்பாடலை EDM என்ற மேற்கத்திய இசை பாணியில் அமைத்துள்ளோம் . இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்.
அஜித் அவர்களுடனும் இயக்குனர் சிவா அவர்களுடனும் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடனும் ஒன்று சேர எனக்கு வாய்ப்பு அளித்த அனிருத் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனிருத்தின் துள்ளலான இசையும், எனது பாணி வரிகள் மற்றும் ராப்பிங்கும் அஜித் சாரின் மிரட்டும் கம்பீர தோற்றமும் ஒன்று சேர்ந்துள்ள இப்பாடல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதில் எனக்கு அளவு கடந்த சந்தோஷம்.
இப்படம் வெளியாகும் போது திரை அரங்கில் மக்களோடு காண காத்துக்கொண்டிருக்கிறேன்,” என்கிறார் யோகி பி.
நேற்று மாலை யு டியூபில் வெளியான இந்தப் பாடல் 24 மணி நேரத்தில் 11 லட்சம் பார்வைகளும், 1 லட்சம் லைக்குகளும் பெற்று சாதனை படைத்துள்ளது.