விஜய் படத் தலைப்பு ‘மெர்சல்’

இராம நாராயணின் ஆசியுடன் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் தயாரிக்கும் 100வது படமாக வளர்ந்து வரும் படத்திற்கு ‘மெர்சல்’ என்ற தலைப்பை சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து படத்தின் முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளார்கள்.

இப்படத்தில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேல், கோவை சரளா, சத்யன், யோகிபாபு, மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இதன் ஆடியோ வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் கவிஞர் விவேக் பாடல்கள் எழுத ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும், அனல் அரசு சண்டைபயிற்சியையும், விஜயேந்திரபிரசாத் மற்றும் ரமணகிரிவாசன் இருவரும் திரைக்கதையையும், ஷோபி நடனப் பயிற்சியையும் கவனிக்கின்றனர்.

அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளிவர பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் சார்பில் முரளிராமசாமி, ஹேமாருக்மணி தயாரிக்கிறார்கள்.

இப்படத்தை அட்லி கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.

Read Previous

விவேகம் – ‘சர்வைவா’ சூப்பர் ஹிட், சந்தோஷத்தில் யோகி பி

Read Next

‘சுல்தான்’ முதல் பார்வை காப்பியா ‘மெர்சல்’ முதல் பார்வை ?