மட்டற்ற மகிழ்ச்சியில் ‘மரகத நாணயம்’ குழுவினர்

அறிமுக இயக்குனர் சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடித்த ‘மரகத நாணயம்’ படம் ஜுன் மாதம் 16ம் தேதி வெளியானது.

வித்தியாசமான பேய்க் கதையாக வெளிவந்த இந்தப் படம் நகைச்சுவை கலந்து கொடுக்கப்பட்டதால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்க சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள்.

“தயாரிப்பாளர் டில்லி பாபு மிகவும் பிஸியான தொழிலதிபர். அவ்வளவு பிஸியிலும் நிறைய பேரிடம் கதை கேட்டு, அவற்றை ஆராய்ந்து, கதையை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்து கொடுப்பவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் முதன் முதலில் கதை சொன்னது ஆதியிடம். கதை மீது நம்பிக்கை வைத்து இன்று வரை என்னோடு பயணித்து வருபவர். படத்தின் மிகப்பெரிய முதுகெலும்பு திபு நினன் தாமஸின் இசை தான். படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனது அவரின் இசை தான்.

சின்ன பட்ஜெட்டிலும் சிறப்பாக உழைத்த படக்குழுவால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. ஹாலிவுட் படங்களுக்கு சிஜி செய்யும் ஃபேண்டம் நிறுவனம் இந்த படத்திற்கு சிஜி செய்தது பெரிய பலம்,” என்றார் இயக்குனர் சரவண்.

நிகழ்ச்சியில் ஆதி, நிக்கி கல்ரானி, டேனி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

கடந்த 23ம் தேதி புதிய படங்கள் வெளிவந்தாலும் ‘மரகத நாணயம்’ படம் அதே வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

Read Previous

Zee Tamil launches Zee Dance League

Read Next

தேசிய விருதை எதிர்நோக்கும் ‘அண்டாவ காணோம்’