‘பாகுபலி 2’க்கு தைவானில் வரவேற்பு

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், நாசர், தமன்னா மற்றும் பலர் நடித்த ‘பாகுபலி 2’ படம் ஏப்ரல் மாதம் சுமார் 9000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியானது.

100 கோடி, 500 கோடி, 1000 கோடி, 1700 கோடி என பல கோடிகளை வசூலித்து வந்த இந்த படம் அடுத்து 2000 கோடியைத் தாண்டுமா என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

சீனா உள்ளிட்ட இன்னும் வெளியாகாத நாடுகளில் அடுத்தடுத்த சுற்று வெளியீடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்தால்தான் 2000 கோடி வசூலைத் தாண்ட முடியும்.

அடுத்த சுற்று வெளியீடாக இன்று முதல் தைவான் நாட்டில் தைபே, தயுவான், சின்சு, தைசங், சியாயி, தைனன், கோசியுங் ஆகிய ஊர்களில் வெளியாகியுள்ளது.

தைவான் ரசிகர்களுக்கு ‘பாகுபலி 2’ படம் பிடித்திருப்பதாக அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

சீனா நாட்டில் வெளியிடப் போவதற்கு முன்னோட்டமாக தைவான் நாட்டு வெளியீடு அமையும்.

தைவானில் படம் வெற்றி பெற்று வசூலைக் குவித்தால் செப்டம்பர் மாதம் சீனாவில் வெளியாகும் போது அங்கும் வெற்றி பெறும்.

Read Previous

‘இன்டென்சிவ் காமெடி யூனிட்‘ – விஜய் டிவியில் புதிய காமெடி நிகழ்ச்சி

Read Next

எவனவன் – விமர்சனம்

Most Popular