‘துப்பறிவாளன்’ எனக்கு முக்கியமான படம் – விஷால்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் அரோல் கொரேலி இசையமைப்பில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் , நடிகர் சங்க பொது செயலாளர் படத்தின் நாயகன் விஷால் , இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் நந்தகோபால், இசையமைப்பாளர் அரோல் கொரேலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக், இயக்குநர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், திரு, நடிகர்கள் அஜய் ரத்தினம், தலைவாசல் விஜய், நடிகை சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் விஷால் பேசியதாவது,

“நானும் இயக்குநர் மிஷ்கின் அவர்களும் 8 வருடமாக ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தோம். அது தற்போது ‘துப்பறிவாளன்’ என்ற அருமையான படம் மூலமாக நிஜமாகியுள்ளது. மிஷ்கின் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.

‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் என்னுடைய கேரியர் பெஸ்ட் சண்டைக் காட்சிகளை பார்க்கலாம். ஒரு தயாரிப்பாளராகவும் , நடிகராகவும் எனக்கு ‘துப்பறிவாளன்’ படம் ‘பாண்டிய நாடு’ படத்தை விட முக்கியமான படமாகும்.

நானும், பிரசன்னாவும் சிம்ரன் அவர்களின் தீவிர ரசிகர்கள். அவரோடு இந்தப் படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். எனக்கு துப்பறியும் நிபுணர்களின் உடல் மொழி மிகவும் பிடித்துவிட்டது. நான் பைரசி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியும். அவர்கள் யார், அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன்.

நான் காமராஜர் அய்யா அவர்களின் வழியில் நடப்பேன், அதே சமயம் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். லட்சுமிகரமான பெண்ணை கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன். ஒட்டு மொத்த திரையுலகமே சேர்ந்து நிச்சயம் புரட்சி தலைவர் எம்.ஜி.யார் அவர்களுக்கு 100வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவோம்,” என்றார் விஷால்.

Read Previous

ரஜினிகாந்த்தை முந்தும் கமல்ஹாசன்

Read Next

ஜுலை 28ம் தேதி ‘நிபுணன்’ வெளியீடு