பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்குனராக அறிமுகமாகும் ‘குப்பத்து ராஜா’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
எஸ் ஃபோகஸ் சார்பில் எம்.சரவணன், எஸ்.சிராஜ், T. சரவணன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். படூர் ரமேஷ் இணை தயாரிப்பு செய்கிறார்.
இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா மற்றும் பல்லக் லால்வானி நடிக்கின்றனர். மற்றும் பார்த்திபன், M S பாஸ்கர், யோகி பாபு, மதுமிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைப்பில், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில், பிரவீன் KL படத்தொகுப்பில், அன்பு அறிவு மற்றும் திலிப் சுப்புராயன் சண்டை அமைப்பில், கிரணின் கலை இயக்கத்தில் ‘குப்பத்து ராஜா’ உருவாகி வருகிறது.
படம் பற்றி தயாரிப்பாளர்கள் கூறியதாவது,
”சினிமா ரசிகர்களின் ரசனையை பல காலமாக விநியோகஸ்தர்களாக இருந்து கண்டறிந்ததால் சினிமா தயாரிப்பில் கால் எடுத்து வைக்க முடிவு செய்தோம். தயாரிப்பாளர்களின் விருப்பமாகவும் இன்றைய இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்படும் கதாநாயகனாக இருப்பவர் ஜிவி.பிரகாஷ். அவரது கதாநாயகன் அந்தஸ்து கூடி வருவதை எல்லோரும் காணலாம்.
‘குப்பத்து ராஜா’ படத்தின் கதையை பாபா பாஸ்கர் அவர்கள் எங்களிடம் கூறிய போது நாங்கள் ஆச்சிரியப்பட்டோம். பிரபல நடன இயக்குனரான அவருக்குள் இப்படி ஒரு திறமையான இயக்குனர் இருக்கிறார் என்பது எங்களுக்கு அன்று தான் தெரிந்தது. அவரது படமாக்கும் முறையும் எங்களை மிகவும் கவர்ந்தது.
ரஜினி சாரின் வெற்றித் தலைப்பு என்பது மட்டுமில்லாமல் இக்கதைக்கும் மிகச் சரியாக பொருந்துவதால் ‘குப்பத்து ராஜா’ தலைப்பை சூட்டினோம்,” என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
வரும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இப்படம் வெளியாக உள்ளது.