‘விவேகம்’ படம் வெளிவந்து முதல் வார இறுதி நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இந்த நான்கு நாட்களில் இந்தப் படம் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்து முதல் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி, உலகம் முழுவதும் இந்த முதல் வார இறுதியில் சுமார் 120 கோடி வரை இப்படம் வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சென்னையில் மட்டும் நான்கு நாட்களில் தினமும் தொடர்ந்து 1 கோடி வசூலைக் கடந்து 4 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் 4,55,000 யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் 2 கோடியே 91 லட்ச ரூபாயை வசூலித்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 4 கோடியே 55 லட்ச ரூபாயும், யுகே, ஆஸ்திரேலியா நாடுகளில் 1 கோடியே 50 லட்ச ரூபாய் வசூலையும் பெற்றுள்ளது.
முதல் வார இறுதி முழுமையான வசூல் விவரங்கள் இன்று தொடர்ந்து வெளியாகும்.