தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைக்கு யார் நம்பர் 1 நடிகை என்று கேட்டால் உடனே ஓவியா என்று சொல்பவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.
3 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நயன்தாராவைக் கூட பின்னுக்குத் தள்ளிவிட்டார் ஓவியா.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரது ஆதரவையும் பெற்று அப்படியே உச்சிக்குப் போய்விட்டார். அவர் டிவிட்டரில் ஒரு பதிவைப் போட்டால் அதை ரஜினிகாந்த்தின் டிவீட்டை விடவும் அதிகம் ‘லைக்’குகிறார்கள். அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களின் செல்லப் பெண்ணாக மாறிவிட்டார் ஓவியா.
நேற்று மாலை திடீரென ஓவியா அவரது ‘Relationship status: single and satisfied’ என்று டிவிட்டரில் பதிவிட்டார். அதாவது ‘உறவு நிலை, திருமணமாகாமல், திருப்திரகமாக’ என்பது அதன் அர்த்தம்.
ஓவியாவின் இந்த டிவீட் அவரது ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மீதான காதலால்தான் அவர் பாதிக்கப்பட்டு வெளியேறினார். இப்போது ஆரவ்வை முற்றிலும் மறந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல அவர் தயாராகிவிட்டார் என்பதை அந்த டிவீட் காட்டுகிறது.
அந்த டிவீட்டிற்கு இதுவரை 49 ஆயிரம் லைக்குகளும், 13 ஆயிரம் ரிடிவீட்டுகளும், 7400 கமெண்ட்டுகளும் கிடைத்துள்ளன.
டிவிட்டரில் கூட அதிகப் பிரபலம் ஆகிவிட்டார் ஓவியா.