சென்னையில் உள்ள புகழ் பெற்ற லயோலா கல்லூரி தற்போதைய ஆட்சி குறித்து ஒரு கருத்துக் கணிப்பை சமீபத்தில் நடத்தியது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக அணிகள் இரண்டாக உடைந்து, மீண்டும் ஒன்று சேர்ந்து, திரும்பவும் இரண்டாக உடைந்துள்ள நிலையில் இந்தக் கருத்துக் கணிப்புகள் மக்களின் எண்ணத்தை பிரபதிபலிப்பதாக உள்ளதா இல்லையா என்பதை படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
உடனே சட்டமன்றத் தேர்தல் வந்தால் எந்தக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமையும் என்ற கேள்விக்கு, தி.மு.க.வுக்கு 67 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு 15.4 சதவீதம் பேரும், பா.ஜ.க.வுக்கு 10.7 சதவீதம் பேரும், பா.ம.க.வுக்கு 5 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்-அமைச்சராக யார் வரவேண்டும் ? என்ற கேள்விக்கு, மு.க.ஸ்டாலினுக்கு 41 சதவீதம் பேரும், நடிகர் ரஜினிகாந்துக்கு 21 சதவீதம் பேரும், நடிகர் கமல்ஹாசனுக்கு 13 சதவீதம் பேரும், டி.டி.வி.தினகரனுக்கு 10 சதவீதம் பேரும், டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு 7 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யாருக்கு வாக்களிப்பீர்கள் ? என்ற கேள்விக்கு, தி.மு.க.வுக்கு 54 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு 18 சதவீதம் பேரும், பா.ஜ.க.வுக்கு 3 சதவீதம் பேரும், பா.ம.க.வுக்கு 2 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 2 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 1 சதவீதம் பேரும் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி தொடரவேண்டுமா ? அல்லது கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தவேண்டுமா ? என்ற கேள்விக்கு, ஆட்சியை கலைக்கவேண்டும் என்று 68.2 சதவீதம் பேரும், பொதுத் தேர்தல் நடத்தவேண்டும் என்று 30.5 சதவீதம் பேரும், ஆட்சி தொடர வேண்டும் என்று 0.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், வெற்றி பெறுவார் என்று 13 சதவீதம் பேரும், வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்று 75 சதவீதம் பேரும், நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தால் வெற்றி பெறுவார் என்று 29 சதவீதம் பேரும், வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்று 61 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ரஜினிகாந்தை விட கமல்ஹாசனின் அரசியல் நுழைவுக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.