சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கண்ணன் இயக்கத்தில் சிவா, திஷா பான்டே மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தமிழ்ப் படம்’.
தமிழ் சினிமாவில் அதற்கு முன் வெளிவந்த பல படங்களில் இடம் பெற்ற ஒரே மாதிரியான, வழக்கமான காட்சிகளைக் கிண்டலடித்து ஒரு முழு நீள கிண்டல் படமாக வெளிவந்த ‘தமிழ்ப் படம்’ ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வெற்றியும் பெற்றது.
சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு இப்போது படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார்கள். இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த, சிவா, திஷா பான்டே, மனோபாலா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், ஐஸ்வர்யா மேனன் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். சதீஷ், சந்தானபாரதி, கலைராணி, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், ஓஎகே சுந்தர், அஜய் ரத்னம், ஜார்ஜ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தயாரிக்க, சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். கண்ணன் இசையமைக்க, சந்துரு வசனத்தை எழுத கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இன்று காலை நடிகர் சித்தார்த் இப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார். நாளை மறுநாள் டிசம்பர் 11ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, இப்படம், 2018ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி வெளியாகும் என்பதை அறிவித்தும் விட்டார்கள்.
படத்தின் நட்சத்திரங்கள்….
சிவா
ஐஸ்வர்யா மேனன்
சதீஷ்
திஷா பாண்டே
சந்தான பாரதி
கலைராணி
மனோபாலா
R.சுந்தர்ராஜன்
நிழல்கள் ரவி
சேத்தன்
OAK சுந்தர்
அஜய் ரத்னம்
ஜார்ஜ்
மற்றும் பலர்
தொழில்நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு – சஷிகாந்த்
கதை, திரைக்கதை, இயக்கம் – C.S.அமுதன்
வசனம் – K.சந்துரு
ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்
இசை – கண்ணன்
படத்தொகுப்பு – K.சுரேஷ்
கலை – செந்தில்ராகவன்
பாடல்கள் – கார்க்கி, C.S.அமுதன், தியாரு, K.சந்துரு
சண்டைப்பயிற்சி – திலிப் சுப்பராயன்
நடனம் – கல்யாண்
உடை வடிவமைப்பு – ஸ்ருதி கண்ணத்
ஸ்டில்ஸ் – C.H.பாலு
தயாரிப்பு மேற்பார்வை – ரங்கராஜ்
தயாரிப்பு நிர்வாகம் – ரகு.SPR
நிர்வாக தயாரிப்பு – சக்ரவர்த்தி ராமசந்திரா
மக்கள் தொடர்பு – நிகில்