‘ஆண்டாள் அழகர்’ தொடரின் அடுத்த அத்தியாயமாய், அடுத்த தலை முறையினரின் கதையாகத் தொடங்கியது ‘பகல் நிலவு’ தொடர்.
தற்போது இந்தத் தொடர் 400 அத்தியாயங்களைக் கடந்துவிட்டது.
இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைதான், இந்தக் கதையின் மையக் கரு. சென்ற தலை முறையின் நட்பை, காதல் உடைத்ததால் இரு குடும்பத்தினரின் தலைமுறையும் அவர்களுக்குள் காதல் கல்யாணம் என்ற விஷயத்தை தவிர்க்க முயன்றனர். ஆனால் விதியின் முடிவு வேறாக இருந்தது.
இத்தொடரில் பிரபா மற்றும் சக்தி பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பிரிந்தாலும் தற்போது, இரு குடும்பத்தினர் மத்தியில் ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.
இதற்கிடையில் பிரபாவின் தாய் மலருக்கு, அவர்களின் கல்யாணத்தில் உடன்பாடு இல்லை என்பதால் சினேகா மீது வெறுப்பைக் காட்டத் தொடங்குகிறார். தன் மகனை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று நினைத்தார். ஆனால் என்ன தான் சினேகா பிரபாவையும், சக்தியையும் சேர்க்கும் நல்ல எண்ணத்தில் நாடகம் செய்திருந்தாலும் மலருக்கு, அவர் மீது வெறுப்பும் கோபமும் உண்டாகியுள்ளது.
மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு ஜோடியான ரேவதி மற்றும் கார்த்திக், தங்களுக்குள் இருக்கும் காதலை, குடும்பம் காரணமாக வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். அவர்களின் காதல் கல்யாணமாகி வெற்றி பெறுமா ? என்பதுதான் வரும் வாரங்களில் வர இருக்கிறது.
இந்த தொடரில் பிரபுவாக சயீத் அன்வரும், கார்த்திக்காக விக்னேஷ் கார்த்திக்கும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் சக்தியாக சமீரா செரீப் மற்றும் ரேவதியாக சூப்பர் சிங்கர் பிரபலம் சௌந்தர்யாவும் நடிக்கின்றனர்.
இப்படி அடுத்தக் கட்டத்தை நோக்கி கதை நகர்கிறது. இத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.