சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்க உள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை உதயநிதி இன்று காலை வெளியிட்டார்.

உதயநிதி தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் ‘நிமிர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு முன் சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால், சுனைனா நடித்த ‘நீர்ப் பறவை’ படத்தை உதயநிதி தயாரித்திருந்தார். இப்போது சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிப்பதோடு அந்தப் படத்தையும் தயாரிக்க உள்ளார்.

இப்படத்தில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடிக்க வாய்ப்புள்ளது. சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் சீனு ராமசாமியும், தமன்னாவும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்த புதிய படம் பற்றி உதயநிதி கூறியதாவது,

“எனக்கு சீனு ராமசாமியின் படங்கள் என்றால் மிக மிகப் பிடிக்கும். அவரது படங்களில் மனித உணர்வும், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் கதை அம்சமும் நிச்சயம் இருக்கும். ஏற்கனவே தேசிய விருது பெற்ற ‘நீர்ப் பறவை’ படத்தைத் தயாரித்தவன் என்ற முறையில் அவருடன் இணைந்து பணியாற்றுவது எங்கள் நிறுவனத்துக்கு மிகுந்த சந்தோஷம்.

இப்போது அவரது இயக்கத்தில் தயாரித்து நடிப்பதில் எனக்கு பொறுப்பும், விருப்பும் அதிகம். ஜனவரி மாதம் 19ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர் , தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

Read Previous

விஜய் டிவியில் புதிய திருப்பங்களுடன் ‘பகல் நிலவு ‘

Read Next

அஜித் ரசிகராக ‘பில்லா பாண்டி’

Most Popular