J.K.பிலிம் புரொடக்ஷன் சார்பில் K.C.பிரபாத் தயாரிப்பில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் ‘பில்லா பாண்டி’ படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார்.
‘மேயாத மான்’ படத்தில் நடித்த இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர்.
‘பில்லா பாண்டி’ திரைப்படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதமாகத் தயாராகி வருகிறது. அஜித் ரசிகராக நடிக்கும் R.K.சுரேஷ் சாதீய வெறியை கடுமையாக எதிர்க்கும் விதமான காட்சிகளில் நடித்து வருகிறார். சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீடு நடக்கவுள்ளது.