விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயச்சித்ரா ஆகிய திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
தயாரிப்பாளர் பேசிய போது, ” பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்காமலேயே அர்விந்த் சாமி இப்படத்தில் நடித்துக் கொடுத்தார்.
நடிகர் அர்விந்த் சாமி, “இந்த படத்திற்காக என்னை தேர்வு செய்ததற்கு, இயக்குனர் சித்திக்ற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் ஆக்க்ஷன் காட்சிகளுக்கு, சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் விஜயன் அவர்களின் 500 வது படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது.
படத்தில் ரோபோ மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது. அவர்களுடன் நானும் சேர்ந்து, சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.
ஜெயச்சித்ரா பேசிய போது, ” எனது மகனான, அம்ரேஷ் இப்பொழுது மூன்றாவது முறையாக இந்த பெருமைமிக்க மேடையில் என்னை நிற்கச் செய்துள்ளான். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இவரது இசை ,அனைவராலும் பாரட்டப் பட்டது. தற்போது இந்த மேடையில் இருந்த அறிஞர்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர். எனக்கு பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்”, என்று அவர் கூறினார்.
தொழில் நுட்பக்குழு :
இயக்கம் : சித்திக்
இசை : அம்ரேஷ்
ஒளிப்பதிவு : விஜய் உலகநாதன்
எடிட்டிங் : கே.ஆர்.கௌரி சங்கர்
புரொடக்ஷன் டிசைன் : மணி சுசித்ரா
ஆர்ட் : ஜோசப் நெல்லிகன்
சண்டை பயிற்சி : பெப்சி விஜயன்
நடனம் : பிருந்தா
நிர்வாக தயாரிப்பு : விமல்.ஜி
தயாரிப்பு : எம்.ஹர்சினி