தனுஷ், சாய் பல்லவி நடிக்கும் ‘மாரி 2’ பூஜையுடன் ஆரம்பம்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மாரி’.

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மாரி 2’ படம் விரைவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது. தனுஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நடிக்கிறார். மற்றும் டோவினா தாமஸ்​​, வரலஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர், வினோத், அஜய் கோஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இந்தப் படத்தில் இணைகிறார்கள்.

இப்படத்தின் பூஜை டிசம்பர் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பாலாஜி மோகன், நடிகர் தனுஷ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டர் ஜி.கே. பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘மாரி 2’ படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்க உள்ளது.

Read Previous

களவாடிய பொழுதுகள் – விமர்சனம்

Read Next

கதாநாயகியாக அறிமுகமாகும் ‘பிக் பாஸ்’ ஜுலி