இதயங்களைத் திறக்க வரும் ‘சாவி’

தி பார்க்லேன்ட் தயாரிப்பில் இரா. சுப்பிரமணியன் இயக்கத்தில் சதீஷ் தாயன்பன் இசையமைப்பில் பிரகாஷ் சந்திரா, சுனுலட்சுமி, ராஜலிங்கம், உதயபானு மகேஷ்வரன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சாவி’.

இப்படம் பற்றி படத்தின் இயக்குனர் கூறியதாவது,

“யதார்த்த சினிமா வரிசையில் தமிழில் ‘சாவி’ திரைப்படம், பழகிய திசையில் பயணிக்கும் கதைக்கு புதிய திசைகளைத் திறக்கிறது.

ராசுமதுரவனின் ‘முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம்’ படங்களில் அறிமுகமான பிரகாஷ் சந்திரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

‘அறம்’ படத்தில் தனது நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்ந்த சுனுலெட்சுமி துருதுருவென விழிகளுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மதுரையில் வாழும் இளைஞன் ஒருவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களே ‘சாவி’ படத்தின் கதை. சாவி உங்களின் இதயங்களையும் திறக்கக் கூடும்,” என்கிறார் படத்தின் இயக்குனர் இரா.சுப்பிரமணியன்.

ஜனவரி 5ம் தேதி இப்படம் வெளிவருகிறது.

Read Previous

மீண்டும் ஜோடி சேரும் விஜய், கீர்த்தி சுரேஷ்

Read Next

‘ராம்னாட் ரைனோஸ்’ அணியை வாங்கிய படத் தயாரிப்பாளர்