விருது கொடுத்தவர்களையே கிண்டலடித்த ‘அருவி’ இயக்குனர்

தமிழ் சினிமாவில் சிலரால் கொடுக்கப்படும் விருதுகளுக்கு மதிப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது. ஆனால், சில பத்திரிகைகள், சில அமைப்புகள் கொடுக்கும் விருதுகளுக்கு நல்ல மதிப்புகள் இருந்து வருகின்றன.

தமிழ் பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் பல ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘ஆனந்த விகடன்’ வாரப் பத்திரிகை கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் விகடன் விருதுகள் என தகுதி வாய்ந்த பல நபர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார்கள்.

கடந்த ஆண்டிலிருந்து அதை ஒரு விழாவாக நடத்தி விருது வழங்குபவர்களை அழைத்து கௌரவித்து வருகிறார்கள். நேற்று சென்னையில் நடைபெற்ற 2017ம் ஆண்டிற்கான விகடன் விருதுகள் விழாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றார்கள்.

2017ம் ஆண்டில் வெளிவந்து அனைவராலும் பாராட்டப்பட்ட ‘அருவி’ படத்திற்கு 4 விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த அறிமுக இயக்குனர் – அருண் பிரபு புருஷோத்தமன், சிறந்த அறிமுக நடிகை – அதிதி பாலன், சிறந்த படத் தொகுப்பு – ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, சிறந்த தயாரிப்பு – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், என ‘அருவி’ படத்திற்காக நான்கு விருதுகள் நேற்று வழங்கப்பட்டன.

விகடன் போன்ற பத்திரிகைகள் வழங்கும் விருதுகளை மட்டுமல்லாது ஊடகங்கள் வழங்கும் விருதுகளையும் திரையுலகத்தைச் சேர்ந்த யாரும் கிண்டலடிக்க மாட்டார்கள்.

விகடன் விமர்சனத்தில் பெரிதும் பாராட்டப்பட்ட ‘அருவி’ படத்திற்கு 55/100 மதிப் பெண்கள் வழங்கியும் பாராட்டியிருந்தார்கள்.

விகடன் அளித்த நான்கு விருதுகளையும் பெற்றுக் கொண்டு, விகடன் வழங்கிய பாராட்டுக்களையும் ஏற்றுக் கொண்டு அதையும் கிண்டலடித்து டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார் படத்தின் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன்.

https://twitter.com/thambiprabu89/status/952439125675683842

விளம்பரம் இல்லாமல் ஊடகங்கள் கிடையாது, வியாபாரம், வசூல் இல்லாமல் திரைப்படங்களும் கிடையாது என்பது அருண் பிரபுவுக்குத் தெரியாதா ?…..

Read Previous

கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’

Read Next

நாச்சியார் – டிரைலர்