‘சிவா மனசுல புஷ்பா’ இசை வெளியீட்டில் ஒரு ‘சபதம்’

வாராகி, தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’.

அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வெளிவரும் சமயத்தில் பல சர்ச்சைகளை எழுப்பப் போவது நிச்சயம் என ஏற்கெனவே சொல்லியிருந்தார் படத்தின் இயக்குனர்.

படத்தின் நாயகன் ஒரு அரசியல் கட்சியிலும், படத்தின் நாயகி எதிர்க்கட்சியிலும் இருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி நடக்கும் கதைதான் ‘சிவா மனசுல புஷ்பா’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் திரையுலகத்தின் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

சர்ச்சைப் படமாக உருவாகி வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சர்ச்சைகளும், சபதங்களும் இருந்தன.

நிகழ்ச்சியில் பேசிய ஜே.கே. ரித்தீஷ், “அடுத்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிட்டால் நிச்சயம் தோற்பார். அவருக்கு எதிராகப் போட்டியிடுபவர்களுடன் சேர்ந்து விஷாலை நடிகர் சங்கத்தை விட்டே ஓட வைப்பேன்,” என்று சபதம் எடுத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ் காமாட்சி, நடிகர் சங்கத்துடன் நிற்காமல், “விஷாலை தமிழ்நாட்டை விட்டே ஓட வைப்பேன்,” என்றார்.

இசை வெளியீட்டு நிகழ்வில் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே. ராஜன், எஸ்.வி. சேகர், இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகை அம்பிகா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலுக்கு ‘சிவா மனசுல புஷ்பா’ விழாவில் போட்டியை ஆரம்பித்துவிட்டார்கள்.

நிகழ்ச்சியில் நலிவடைந்த நடிகர்கள் 100 பேருக்கு தலா 10000 ரூபாயை வழங்கினார் வாராகி.

விரைவில் இப்படம் வெளியாகிறது.

Read Previous

மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’, பிப்ரவரி 12 ஆரம்பம்

Read Next

கலகலப்பு 2 விமர்சனம்