நடிகர் மாதவன், சரிதா தம்பதியினரின் ஒரே மகன் வேதாந்த். தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டி ஒன்றில் 1500 மீட்டர் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
அது பற்றி தன் சமூக வலைத்தளத்தில் மாதவன் பெருமையுடன் தகவலை வெளியிட்டுள்ளார். “எனக்கும் என் மனைவிக்கும் பெருமையான நேரம். இன்று தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதே நீச்சல் போட்டி ஒன்றில் வேதாந்த் முதல் பதக்கத்தை வென்றுள்ளான். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி,” எனக் கூறியுள்ளார்.
மாதவன் மகன் பதக்கம் வென்றதற்கு பல திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள். அனைவருக்கும் மாதவன் தனித்தனியாக நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.