‘பக்கா’ – ஏப்ரல் 27ம் தேதி வெளியீடு

பென் கண்ஸ்டோரிடியம் சார்பில் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்திக்கும் படம் ‘பக்கா’.

விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

கிரிக்கெட் ரசிகரான டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியராக இருக்கும் டோனி குமார் (விக்ரம் பிரபு). ரஜினிகாந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா ( நிக்கி கல்ராணி). கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா (பிந்து மாதவி).

இவர்கள் மூவருக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் தான் கலகலப்பான ‘பக்கா’ படம்.

காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள ‘பக்கா’ படம் வருகிற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 27ம் தேதி வெளியாக உள்ளது.

Read Previous

‘காலா’ – ஜுன் 7ம் தேதி வெளியீடு

Read Next

சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’