தடைகளைத் தாண்டி வரும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

ஹர்ஷினி மூவீஸ் தயாரிப்பில் சித்தி இயக்க்ததில் அரவிந்த்சாமி, அமலா பால் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி, சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் முருகன் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அரவிந்த்சாமி பேசும் போது,

“அனைவரும் பேசியது போல படம் பல தடைகளைத் தாண்டி வெளியாக இருக்கிறது. படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த முருகன் அவர்களுக்கு நன்றி. படத்தில் ரமேஷ் கண்ணாவின் வசனம் அருமையாக உள்ளது. சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா அருமையான நகைச்சுவைக் காட்சிகளை கொடுத்துளள்னர். நைனிகா, ராகவன் இரண்டு பேருமே முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

அமலா பால் ரொம்பவே நன்றாக நடித்துள்ளார். அம்ரேஷ் இசை,சித்திக் இயக்கம் எல்லாமே அருமையாக இருக்கிறது. விஜயன் அவர்களுடைய 500வது படம் இது. அவருகளுக்கு என்னுடைய வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.யுள்ளார்.

பரதன் பிலிம்ஸ் இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மே 11 அன்று வெளியிடுகிறது.

Read Previous

Mr சந்திரமௌலி – டிரைலர்

Read Next

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ஆபாசப் படமா ?