‘காளி’ – விஜய் ஆண்டனி ஜோடியாக 4 நாயகிகள்

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காளி’.

இப்படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளார்கள்.

முன்னணி நாயகர்களே அதிகபட்சமாக இரண்டு கதாநாயகிகளுக்கு மேல் தங்கள் படங்களில் நடிக்க வைக்க மாட்டார்கள். வளர்ந்து கொண்டிருக்கும் கதாநாயகனான விஜய் ஆண்டனி படத்தில் நான்கு நாயகிகள் என்பது சிலருக்குப் பொறாமையாகத்தான் இருக்கிறது.

படத்திற்குப் படம் சீரியசான கதாபாத்திரங்களில் நடிப்பவருக்கு நான்கு கதாநாயகிகளா என சிலர் கேட்டதற்கு படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி சொல்லும் பதில், “இதுவரை பார்த்த விஜய் ஆண்டனி வேறு, இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கப் போகும் விஜய் ஆண்டனி வேறு. காதல் காட்சிகளில் நான் ‘கட்’ என்று சொன்ன பிறகும் அவர் காதலித்துக் கொண்டிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். படத்தில் கலகலப்பான விஜய் ஆண்டனியையும் நீங்கள் பார்க்கலாம்,” என்கிறார்.

படத்தில் நான்கு ஹீரோயின்கள் இருந்தாலும் நால்வருமே படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

Read Previous

ஒரு குப்பைக் கதை – டிரைலர்

Read Next

‘காளி’ – மீண்டும் அம்மா சென்டிமென்ட்டில் விஜய் ஆண்டனி