பாலாவின் ‘வர்மா’ படக் கதாநாயகி மேகா

தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.

பாலா இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் நாயகி யார் என்பது இதுவரை முடிவாகாமல் இருந்தது.

இப்போது கதாநாயகியைக் கண்டுபிடித்து அவரை வைத்து காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள்.

பெங்காலி மொழியில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மேகா தான் ‘வர்மா’ படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

கதக் நடனத்தை முறையாகக் கற்றுள்ளவராம் மேகா.

பாலாவின் பி ஸ்டுடியோஸ் வழங்க இ4 என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Read Previous

‘என்டிஆர்’ தெலுங்குப் படத்தில் வித்யா பாலன்

Read Next

சாவித்ரி ஆக மாறும் கீர்த்தி சுரேஷ் – உருவாக்க வீடியோ