‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு

ஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சூலு’ படத்தை தமிழில் ‘காற்றின் மொழி’ ஆக ரீமேக் செய்து வருகிறார்கள்.

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பில் இன்று சிம்பு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இது பற்றி படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில்,

“காற்றின் மொழி’ படத்தில் சிம்பு ஒரு முக்கியமான, சிறப்பான கதாபாத்திரத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி, அதற்காக அவருக்கு நன்றி. மொத்த படக்குழுவினரும் அவருடன் படப்பிடிப்பில் சிறப்பாக நேரம் செலவிட்டனர். அந்தக் காட்சிகள் படத்தில் மிகவும் சுவாரசியமாக இருக்கும்,” என்று கூறியுள்ளார்.

Read Previous

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ

Read Next

புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்